மியூச்சுவல் ஃபண்டுகளில் வளர்ந்து வரும் சில்லறை முதலீட்டாளர்கள் பங்கேற்பில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்த SIP பங்களிப்பு தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. அப்போது மாதாந்திர எஸ் ஐ பி முதலீடு ரூ.8,513 கோடியாக இருந்தது. 2025ம் நிதியாண்டில் எஸ் ஐ பி முதலீடு 45.24 சதவீதம் அதிகரித்து ரூ.2.9 லட்சம் கோடியாக இருந்தது.
அதிக அளவிலான எஸ் ஐ பி கணக்குகள் நிறுத்தப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. அதாவது SIP கணக்குகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 8.11 கோடியுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 8.38 கோடியாக உயர்ந்தது. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக எண்ணிக்கையிலான SIP நிறுத்தத்தை கண்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் 46 லட்சம் புதிய கணக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1.36 கோடி கணக்குகள் மூடப்பட்டன.
எஸ் ஐ பிகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (AUM) ஏப்ரல் மாதத்தில் ரூ.13.9 லட்சம் கோடியாக உயர்ந்தன. இது மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மொத்த AUM இல் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.
இதற்கிடையில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான நிகர முதலீடு ஏப்ரல் மாதத்தில் 3.2 சதவீதம் குறைந்து ரூ.24,269 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த மாதம் ரூ.2.77 லட்சம் கோடி நிகர முதலீடுகளைக் கண்டன.